ரஜினி நடிக்கும் ‘கூலி’ படத்தில் அவருக்கு வில்லனாக நடிகர் எஸ்.ஜே.சூர்யா நடிக்க இருக்கிறார்.
ரஜினி, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கூலி’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் இப்படத்திற்கான படப்பிடிப்புப் பணிகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கின்றன.
இப்படத்தைத் தொடர்ந்து ரஜினி அடுத்ததாக நடிக்கவுள்ள ‘ஜெயிலர் 2’ குறித்து அண்மைய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் எஸ்.ஜே. சூர்யா வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதல் பாகத்தில் விநாயகன் வில்லன் கதாபாத்திரத்தில் அதிரடியாக நடித்திருந்தார். தற்போது இரண்டாம் பாகத்தில் எஸ்.ஜே. சூர்யா நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஏற்கெனவே விஜய், கமலுக்கு வில்லனாக நடித்துள்ள இவர், ‘ஜெயிலர்’ இரண்டாம் பாகத்தின் வாயிலாக முதன்முறையாக ரஜினியுடன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிப்பு அரக்கனான எஸ்.ஜே. சூர்யா ரஜினியுடன் இணைந்து நடித்தால், அது நிச்சயமாக மிகப் பெரிய சம்பவமாக இருக்கும். மேலும், இப்படத்தில் முதல் பாகத்தில் நடித்த மற்ற நட்சத்திரங்களும் இணைந்து நடிப்பார்கள் என கூறப்படுகிறது.