சபேஷ் காலமானார்

சபேஷ் காலமானார்

படம்: ஊடகம்

24 Oct 2025 - 5:32 pm

1 mins read

இசையமைப்பாளர் தேவாவின் இளைய சகோதரரும் இசையமைப்பாளரும் திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத்தின் தலைவருமான சபேஷ் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் காலமானார்.

தமது மற்றொரு சகோதரர் முரளியுடன் இணைந்து பல படங்களுக்கு இசையமைத்துள்ளார் சபேஷ்.

சமுத்திரம், தவமாய் தவமிருந்து, இம்சை அரசன் 23ம் புலிகேசி உள்ளிட்ட பல படங்களுக்கு சபேஷ் - முரளி இசையமைத்துள்ளனர். இதுதவிர தேவா இசையமைத்த ஏராளமான கானா பாடல்களையும் சபேஷ் பாடியுள்ளார். ’கொத்தவால்சாவடி லேடி’, ‘உதயம் தியேட்டருல என் இதயத்தை தொலைச்சேன்’, ‘காத்தடிக்குது காத்தடிக்குது’, ‘ஒரே ஒரு ஊருக்குள்ளே’ உள்ளிட்ட பல வெற்றிப் பாடல்களை சபேஷ் பாடியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்