விஜய், அஜித் ஆகிய முன்னணி நடிகர்களின் பழைய படங்களைத் தற்போது புதுப்படங்களுக்கு இணையாக, பெரிய அளவில் விளம்பரம் செய்து மறுவெளியீடு செய்கின்றனர்.
அந்த வகையில், விஜய் நடிப்பில் 2005ல் வெளியான ‘சச்சின்’ திரைப்படம் மறுவெளியீடு காண்கிறது.
முதல் வெளியீட்டின்போது படம் வெற்றி பெறவில்லை. எனினும், பிறகு படத்தின் பாடல்களும் நகைச்சுவைக் காட்சிகளும் தொலைக்காட்சி அலைவரிசைகளில் வெளியாகி வெகுவாக ரசிக்க வைத்தன.
எனவே, 20 ஆண்டுகளுக்குப் பிறகு மறுவெளியீடு செய்கின்றனர்.


