‘3பிஎச்கே’ திரைப்படத்தைப் பார்த்த முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் அப்படத்தைப் பாராட்டியிருக்கிறார்.
ஒரு நிகழ்வில், ரசிகர்களுடன் சச்சின் உரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர் அவரிடம் அடிக்கடி படங்கள் பார்ப்பீர்களா? அப்படி அண்மையில் பார்த்துப் பிடித்த படம் எதும் உள்ளதா? என்று கேட்டார்.
அதற்கு சச்சின், “எனக்கு நேரம் கிடைக்கும்போது படங்கள் பார்ப்பேன். அண்மையில் ‘3பிஎச்கே’ மற்றும் ‘அட்டா தம்பாய்ச்சா நாய்’ ஆகிய படங்களை பார்த்து ரசித்தேன்,” என்றார்.
சச்சினின் பாராட்டுக்குப் படத்தின் இயக்குநர் ஸ்ரீ கணேஷ் நெகிழ்ச்சியோடு நன்றி தெரிவித்தார்.
“நன்றி சச்சின் சார். இந்த வாழ்த்து, எங்கள் படத்துக்குப் பெரிய அங்கீகாரம்,” என்று தெரிவித்திருக்கிறார்.
‘3 BHK’ திரைப்படம், வீடு வாங்க ஆசைப்படும் குடும்பம் பற்றிய கதையாகும்.
இப்படத்திற்குப் பிரபல பாடகி பாம்பே ஜெயஸ்ரீயின் மகன் அம்ரித் ராம்நாத் இசையமைத்துள்ளார்.
சித்தார்த் 40வது திரைப்படமாக வெளியான ‘3 BHK’ மக்களுடைய நல்ல வரவேற்பைப் பெற்றது. குருதி ஆட்டம் போன்ற படங்களை இயக்கிய ஸ்ரீகணேஷ் இந்த படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக சைத்ரா நடித்துள்ளார். அவருக்கு தங்கையாக மீதா ரகுநாத்தும் பெற்றோராக சரத்குமார்-தேவயாணியும் நடித்துள்ளனர்.