இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் பக்கம்தான் இப்போது வாய்ப்பு மழை கொட்டுகிறது.
தற்போது எட்டு புதுப் படங்களுக்கு இசையமைக்க ஒப்புக்கொண்டுள்ளார்.
ஏற்கெனவே ஏற்றுக்கொண்ட படங்களுக்கான பாடல்களைக் கிட்டத்தட்ட முடித்துவிட்ட நிலையில், மேலும் பல வாய்ப்புகள் அவரைத் தேடிவந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில், சாய் அபயங்கரை ஒரு படத்திலாவது நாயகனாக நடிக்கவைக்க சிலர் முயற்சி மேற்கொண்டுள்ளனர். இசையைத் தவிர வேறு எதிலும் பெரிதாக விருப்பமில்லை என்று அவர் கூறிவிட்டதாகத் தகவல்.
மேலும் இசைப்பணிகளுக்கு இடையே வேறு எதற்கும் நேரம் ஒதுக்கமுடியாது என்பதால், படப்பிடிப்புக்கு எனத் தம்மால் கால்ஷீட் ஒதுக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.
ஆனால், இதைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்ட சிலர், உங்கள் விருப்பத்துக்கு ஏற்றவாறு கால்ஷீட்டை எப்போது வேண்டுமானாலும் மாற்றி அமைத்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளனர்.
இதையடுத்து, சாய் அபயங்கர் நடிப்புக்கான தனது முடிவை மாற்றிக் கொள்ளக்கூடும் எனக் றப்படுகிறது.

