சூர்யா நடிக்கும் அவரது 45வது படத்துக்கு இசையமைக்க ஒப்பந்தமான இளம் பாடகர் சாய் அபயங்கரை, சூட்டோடு சூடாக பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் படத்திலும் ஒப்பந்தம் செய்துள்ளனர்.
அறிமுக இயக்குநர் கார்த்தஷ்வரன் இயக்கும் இப்படத்தை, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. விரைவில் படப்பிடிப்பைத் தொடங்க உள்ளனராம்.
அனிருத், தமன் ஆகிய இளம் இசையமைப்பாளர்கள் வரிசையில் சாய் அப்யங்கரும் இணைவார் என இசை ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.