இன்று இளையர்களின் மனம் கவர்ந்த பாடகர்கள் வரிசையில் சாய் அபயங்கருக்கும் நிச்சயம் முன்னணி இடம் உண்டு. அடுத்து முன்னணி இசையமைப்பாளர்கள் பட்டியலிலும் அவர் இடம்பெறுவார் என்கிறார்கள் அவரது ரசிகர்கள்.
அண்மைக்காலமாக, நடிகர் சிம்புவை அடிக்கடி சந்திக்கிறார் சாய் அபயங்கர். அவரின் ஒலிப்பதிவுக் கூடத்துக்கு அழைத்துப் போய்க் காண்பித்திருக்கிறார்.
“சாய் பாடல்களை உருவாக்கும் பாணியைக் கண்டு சிம்பு ஆச்சரியப்பட்டுப் போனதாகத் தகவல். சிம்புவை வைத்து அஸ்வத் மாரிமுத்து இயக்கும் படத்துக்கு சாய்தான் இசை. கதையை முழுமையாகக் கேட்டு முடித்துவிட்ட சாய், சிறப்பான பாடல்களைத் தரும் முடிவுடன் பம்பரமாகச் சுழல்கிறார்.