‘அமரன்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தெலுங்குப் படம் ஒன்றில் ஒப்பந்தமாகி உள்ளார் சாய்பல்லவி. இதில் துல்கர் சல்மானுடன் அவர் மீண்டும் இணைந்துள்ளார்.
படத்துக்கு ‘ஆகாசம் லோ ஒக தாரா’ எனத் தலைப்பு வைத்துள்ளனர்.
துல்கர், சாய் பல்லவி இருவரும், இதற்கு முன்பு ஏற்கெனவே ‘களி’ என்ற மலையாளப் படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இருவரும் மீண்டும் இணைந்து நடிக்கும் படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.
சாய் பல்லவியைப் பொறுத்தவரை தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களுக்கு முன்னுரிமை அளித்து வருகிறார்.
துல்கர் சல்மான் தமிழிலும் தெலுங்கிலும் கூடுதல் கவனம் செலுத்துகிறார். மேலும், சொந்தமாக படங்களைத் தயாரித்தும் வருகிறார்.