ஓய்வு நேரம் கிடைத்தால் தமக்குப் பிடித்தமான விஷயங்களில் கவனம் செலுத்துவாராம் நடிகை சாய் பல்லவி.
அண்மையில் தனது பண்ணையில் தேனீ வளர்ப்புக்கு முன்னுரிமை அளித்திருப்பதால், அதில்தான் தற்போது இவரது முழுக் கவனமும் உள்ளது.
“தேனீ வளர்ப்பில் நான் அவ்வளவு திறமைசாலியாக இன்னும் மாறவில்லை. பொதுவாக ஓய்வு நேரங்களில் எனக்குத் தனிமை பிடிக்கும். அப்போது திரைப்படங்களைப் பார்ப்பேன், நடனமாடுவேன், விரும்பினால் சமைப்பேன்.
“பெரும்பாலும் பிடித்த உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிடுவேன். என் தோட்டத்துக்குச் செல்வேன். இப்போது சில விவசாய வேலைகள் நடக்கின்றன. அவர்களுடன் சேர்ந்து கேரட், உருளைக்கிழங்கு போன்றவைகளை அறுவடை செய்வேன். இப்படித்தான் என் ஓய்வு நேரம் கழியும்,” என்கிறார் சாய் பல்லவி.
நாக சைதன்யா, சாய் பல்லவி நடிப்பில் கடந்த 2021ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘லவ் ஸ்டோரி’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து இருவரும் மீண்டும் இணைந்து நடித்துள்ள ‘தண்டேல்’ தெலுங்குப் படத்துக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.