ரஜினி படத்தில் சாய் பல்லவி

1 mins read
788ebb89-ace9-4f53-9a59-daba47be3dbc
சாய் பல்லவி. - படம்: டெக்கான் குரோனிக்கல்

ரஜினியின் 173வது படம் குறித்து நாள்தோறும் பல்வேறு தகவல்கள் வெளியானவண்ணம் உள்ளன.

இந்தப் படத்தில் சாய் பல்லவி நடிக்க உள்ளதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் கமலின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் ரஜினி படத்தை சுந்தர்.சி இயக்கவிருந்தார். பின்னர் சில காரணங்களால் அவர் அப்படத்திலிருந்து விலகியதாக அறிவிப்பு வெளியானது.

இதில் சாய் பல்லவிதான் நாயகி என்று கூறப்பட்ட நிலையில், சுந்தர்.சி விலகிய பின்னர் சாய் பல்லவியும் விலகிவிட்டார் என்று கூறப்பட்டது.

தற்போது இப்படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்குவதாக அறிவிக்கப்பட்டதையடுத்து, இரண்டு முன்னணி நாயகிகளிடம் தயாரிப்புத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம்.

இருவரில் சாய் பல்லவியும் ஒருவர் என்றும் நல்ல குடும்பக் கதையாக உருவாகும் படம் என்பதால் அவர் நிச்சயம் நடிப்பார் என்றும் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்