சாய் பல்லவி நிராகரித்த படங்களில் பெரும்பாலானவை, அவருக்கு நடிப்புத் திறமையை வெளிப்படுத்தப் போதுமான வாய்ப்பை வழங்காத படங்கள் எனத் தெரிகிறது.
நடிப்புத் திறமைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து, கதைத் தேர்வில் உறுதியான தனிப்பட்ட கொள்கைகளைப் பின்பற்றுவதில் சாய் பல்லவி பிரபலமானவர். இந்தப் பிடிவாதத்தால், தளபதி விஜய், மகேஷ் பாபு போன்ற உச்ச நட்சத்திரங்களின் மிகப் பெரிய வெற்றித் திரைப்படங்களை நிராகரித்துள்ளார் என்ற அதிர்ச்சித் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
தளபதி விஜய்யின் ‘லியோ’ படத்தில் என தனக்கான கதாபாத்திரத்தின் முக்கியத்துவம் மிகவும் குறைவு. நாயகிக்கு நடிப்பை வெளிப்படுத்த போதுமான வாய்ப்பு இல்லை என்றும், பிரதானக் கதைக்களம் நாயகனைச் சுற்றியே அமைந்திருந்தது என்றும் அவர் கருதியதாகக் கூறப்படுகிறது.
மகேஷ் பாபுவின் ‘சர்க்கார் வாரி பாட்டா’ படத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் இல்லை. வணிக ரீதியான சண்டைப் படத்தில் நாயகி வெறும் கவர்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்தப்படுவதாக உணர்ந்துள்ளார்.
இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’. துல்கருக்கு ஜோடியாக நடிக்க முதலில் சாய் பல்லவியிடம் கேட்கப்பட்டது. ஆனால் அவர் கதை பிடிக்கவில்லை என மறுத்ததால், அந்தக் கதாபாத்திரம் நடிகை ரிது வர்மாவுக்குப் போனது.
மணிரத்னம் இயக்கிய ‘காற்று வெளியிடை’ படத்தில் கார்த்தி நாயகனாக நடித்திருந்தார். இதில் நடிக்க தொடக்கத்தில் தேர்வானாலும், அப்போதைய தன் அனுபவமின்மை, கதாபாத்திரத்தின் நுணுக்கம் காரணமாகத் தான் தயாராக இல்லை என்று பின்வாங்கியதாகக் கூறப்படுகிறது.
விஜய் தேவரகொண்டா நாயகனாக நடித்த ‘டியர் காம்ரேட்’ படத்தில், கதையில் இடம்பெற்ற முத்தக் காட்சிகளில் நடிக்க அவர் சௌகரியமாக உணராததால் அந்தப் படத்தில் நடிக்க மறுத்தார்.
அஜித் குமார் நடித்த ‘வலிமை’ சண்டை கலந்த வணிக ரீதியான படம். இதுபோன்ற திரைப்படங்களில் நாயகியைவிட நாயகனுக்கே முக்கியத்துவம் இருக்கும் என்பதால், தனது திறமைக்கு சவால் இல்லாத வேடம் என முடிவெடுத்து நடிக்கவில்லை.
தொடர்புடைய செய்திகள்
சிரஞ்சீவி நடித்த ‘போலா ஷங்கர்’. தமிழில் வெளிவந்த ‘வேதாளம்’ படத்தின் மறுபதிப்புப் படம் என்பதால், இதுபோன்ற படங்களில் நடிக்க பொதுவாக விருப்பமில்லை என்ற தனது கொள்கையால் மறுத்துவிட்டார்.
சாய் பல்லவி, தற்போது ரன்பீர் கபூர், யாஷ் நடிப்பில் உருவாகிவரும் ‘ராமாயணம்’ திரைப்படத்தில் சீதையாக நடிக்கிறார். இந்தப் படம் பல பாகங்களாகத் தயாரிக்கப்பட்டு வருகிறது. முதல் பாகம் 2026 தீபாவளிக்கும் இரண்டாம் பாகம் 2027 தீபாவளிக்கும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகிறது.
ஹான்ஸ் ஸிம்மரும் ஏ.ஆர். ரஹ்மான் இருவரும் இப்படத்திற்கு இணைந்து இசையமைக்கின்றனர்.
இந்தப் படத்தில் லட்சுமணனாக ரவி தூபே, ஹனுமானாக சன்னி தியோல், கைகேயியாக ரகுல் ப்ரீத் சிங், மண்டோதரியாக காஜல் அகர்வால் நடிக்கின்றனர்.

