சாய் பல்லவியின் பாலிவுட் படம்

சாய் பல்லவியின் பாலிவுட் படம்

1 mins read
733434a9-380b-46fd-bb4d-76f68aed54a1
‘ஏக் தின்’ படக்காட்சி. - படம்: தினத்தந்தி
Google News Preferred Icon

நடிகர் ஆமிர் கான் தயாரிப்பில், நடிகை சாய் பல்லவி நாயகியாக நடித்துள்ள ‘ஏக் தின்’ திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியாகியுள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிப் படங்களில் திரையுலகின் முன்னணி நடிகையாக இருக்கும் சாய் பல்லவி இயக்குநர் சுனில் பாண்டே இயக்கும் ‘ஏக் தின்’ படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகின்றார்.

இந்த நிலையில், ‘ஏக் தின்’ திரைப்படத்தின் 2ஆவது முன்னோட்டக் காட்சியை படக்குழுவினர் வியாழக்கிழமை (ஏப்ரல் 16) அன்று வெளியிட்டனர். ஏற்கெனவே, இப்படத்தின் முதல் முன்னோட்டக் காட்சி வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து, பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வரும் மே 1 அன்று ‘ஏக் தின்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகின்றது.

குறிப்புச் சொற்கள்