கர்நாடக இசை மேதை எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில், நடிகை சாய் பல்லவி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதற்காக அவர் கர்நாடக இசையைக் கற்று வருகிறார்.
வித்யா பாலன், திரிஷா, நயன்தாரா போன்ற பெயர்கள் அடிபட்ட நிலையில், சாய் பல்லவி ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தை இயக்குநர் கவுதம் தின்னனுரி இயக்குகிறார்.
இதற்கிடையில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்திலும் சாய் பல்லவி நடிக்கவுள்ளார்.
‘அமரன்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இந்தியில் ‘ராமாயணம்’ படத்தில் சீதையாக நடிக்கிறார்.
தொடர்ந்து வெற்றிப் படங்களைக் கொடுத்து வருவதால் எம்.எஸ்.சுப்புலட்சுமி படத்தில் நடிக்க அவருக்கு சம்பளம் 10 கோடி ரூபாய் பேசப்பட்டு உள்ளது. இருப்பினும், தென்னிந்தியாவில் அதிக சம்பளம் (ரூ.12-15 கோடி) பெறும் நடிகையாக நயன்தாராவே தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.

