ஜி.வி.பிரகாஷும் சைந்தவியும் பிரிந்துவிட்டதாக வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு தமிழ்த் திரையுலக ரசிகர்களை வருத்தமடைய வைத்துள்ளது.
இந்நிலையில், தங்களுடைய இந்த முடிவு எந்தவொரு வெளிப்புற சக்தியாலும் நிகழவில்லை என்று பாடகி சைந்தவி விளக்கம் அளித்துள்ளார்.
“நானும் ஜி.வி.பிரகாஷும் இணைந்து எடுத்த முடிவு இது.
“பள்ளிப் பருவத்தில் தொடங்கிய எங்கள் நட்பு, 24 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. அந்த நட்பை தொடர்ந்து பேணுவோம்,” என சைந்தவி தெரிவித்துள்ளார்.
ஜி.வி.பிரகாஷும் சைந்தவியும் 11 ஆண்டுகளுக்கு முன்பு 2013ல் திருமணம் புரிந்தனர். 2020ல் ஆன்வி எனும் பெண் குழந்தையை அவர்கள் வரவேற்றனர்.

