தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘ஓடிடி’ தளத்திலும் வெற்றி நடைபோடும் ‘சையாரா’

1 mins read
df739164-1344-49ac-a390-4e694814f8c0
‘சையாரா’ திரைப்படம் ரூ.577 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. - படம்: சமூக ஊடகம்

மோஹித் சூரி இயக்கத்தில் வெளியாகிய ‘சையாரா’ எனும் பாலிவுட் திரைப்படம் தற்போது ‘ஓடிடி’ தளத்திலும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

யஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவான ‘சையாரா’ படம் கடந்த ஜூலை 18ஆம் தேதி வெளியாகியது.

அறிமுக நாயகன் அஹான் பாண்டே, நாயகியாக அனீத் பட்டா அதில் நடித்தனர்.

கொரியன் திரைப்படமான ‘எ மொமண்ட் டூ ரிமம்பர்’ (A Moment to Remember) என்ற படத்தைத் தழுவி இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.

நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் ரூ.577 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.

இந்நிலையில், நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் இம்மாதம் 12ஆம் தேதி ‘சையாரா’ வெளியாகியது. இதிலும் இந்தப் படத்துக்கு வரவேற்பு உள்ளது. பல நாடுகளிலும் முதல் பத்துப் படங்களுக்கான பட்டியலில் ‘சையாரா’வும் ஒன்றாக உள்ளது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்