நடிகை சாக்ஷி அகர்வால், தனது நண்பரான நவ்நீத் என்பவரைத் திடீரென திருமணம் செய்துகொண்டுள்ளார்.
‘ராஜா ராணி’ படம் மூலம் அறிமுகமானவர் சாக்ஷி அகர்வால்.
‘காலா’, ‘விஸ்வாசம்’, ‘அரண்மனை-3’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவரும் நவ்நீத்தும் பல ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் மூலம் மேலும் பிரபலமானார் சாக்ஷி.
இந்நிலையில், இவரது திருமணம் கோவாவில் உள்ள நட்சத்திர தங்கும் விடுதி ஒன்றில் கடந்த 2ஆம் தேதி நடைபெற்றது.

