நடிகர் சல்மான்கானும் கிரிக்கெட் வீரர் தோனியும் மிகவும் நெருக்கமான நண்பர்களாகிவிட்டனர்.
நேரம் கிடைக்கும்போதெல்லாம் இருவரும் விவசாயம் குறித்துப் பல்வேறு தகவல்களைப் பகிர்ந்துகொள்கிறார்கள். அது மட்டுமல்ல, அண்மையில் இருவரும் விவசாய நிலத்தில் உழவு செய்த புகைப்படம் ஒன்று இன்ஸ்டகிராம் தளத்தில் வெளியாகி உள்ளது.
இந்தப் புகைப்படத்தில் டிராக்டர் ஓட்டிய பின்னர் சல்மான்கானும் தோனியும் சேறும் சகதியுமாக காணப்படுகிறார்கள். அதில், இவர்கள் இருவருடன் பாடகர் எபி தில்லானும் உள்ளார்.
மும்பை புறநகர்ப் பகுதியில் உள்ள பன்வல் என்ற இடத்தில் சல்மானுக்கு ஐம்பது ஏக்கர் நிலம் உள்ளது. இங்குள்ள பண்ணை வீட்டுக்கு அடிக்கடி சென்று, தங்கி விவசாயப் பணிகளைக் கவனிப்பதுதான் சல்மானின் பொழுதுபோக்காம்.
தோனியை அங்குதான் அழைத்துச்சென்று விவசாய நுணுக்கங்களை அவர் கற்றுக்கொடுத்திருப்பார் என்கிறார்கள் ரசிகர்கள்.

