தோனி, சஞ்சய் தத்துடன் 60வது பிறந்தநாளைக் கொண்டாடி மகிழ்ந்த சல்மான் கான்

1 mins read
f873cc7e-7718-4fa1-9103-fec07e42364d
செய்தியாளர்களுடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடிய சல்மான் கான். - படம்: விகடன்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் தனது 60வது பிறந்தநாளை மும்பை பன்வெலில் உள்ள தனது பண்ணை வீட்டில் வெகு விமரிசையாகக் கொண்டாடினார்.

இவ்விழாவில் எம்.எஸ்.தோனி, சஞ்சய் தத், தபு, ரகுல் பிரீத் சிங், ஜெனிலியா, இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி உள்ளிட்ட பல பாலிவுட் நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர்.

நள்ளிரவில் பண்ணை வீட்டிற்கு வெளியே வந்த சல்மான் கான், அங்கு காத்திருந்த பத்திரிகையாளர்களுடன் இணைந்து கேக் வெட்டினார். அப்போது மூத்த பெண் பத்திரிகையாளர் பாரதி துபேவை அன்புடன் உபசரித்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தினார்.

லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலின் மிரட்டல் காரணமாக, விழா நடைபெற்ற இடத்தில் பலத்த போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இன்று (டிசம்பர் 28) மும்பையில் உள்ள தனது வீட்டில் திரளும் ரசிகர்களை சல்மான் கான் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாநடிகர்