இது போலி இல்லை: சட்டையைக் கழற்றிய சல்மான்

இது போலி இல்லை: சட்டையைக் கழற்றிய சல்மான்

1 mins read
b4de26b8-de65-44f7-807a-b86074b0308b
படம்: டுவிட்டர் -

பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் தமது 'சிக்ஸ் பேக்' உடற்கட்டு போலியன்று, அது உண்மையானது என்று மேடையில் சட்டையைக் கழற்றி அதிர்ச்சி தந்துள்ளார்.

அஜித் நடித்த வீரம் படம் இந்­தி­யில் 'கிஸி கி பாய், கிஸி கி ஜான்' என்ற பெய­ரில் மறு­ப­திப்பு செய்­யப்­பட்­டுள்ளது. அதில் அஜித் வேடத்­தில் சல்­மான் கான் நடித்­தி­ருக்­கி­றார்.

அப்படத்தின் முன்னோட்டம் திங்கட்கிழமை (ஏப்ரல் 10) வெளியிடப்பட்டது.

முன்னோட்ட வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது சல்மான் கான் தமது சட்டையைக் கழற்றி கட்டுடலைக் காட்டி, ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினார்.

சல்மான் கானின் உடல் போலியாகத் திரைப்படங்களில் காட்டப்படுவதாக சமூக ஊடகங்களில் பலரால் கேலி செய்யப்பட்டு வருகின்றது. அதற்கு பதிலடி தரும் விதமாக சல்மான் கான் அந்நிகழ்ச்சியில் தமது உடலைக் காட்டினார்.

57 வயதான சல்மான் கானின் கட்டுடலைக் கண்ட ரசிகர்கள் உற்சாகத்தில் அவரைப் புகழ்ந்து சமூக ஊடகங்களில் வாழ்த்தி வருகின்றனர்.

இம்மாதம் 21ஆம் தேதி 'கிஸி கி பாய், கிஸி கி ஜான்' திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்