ரேவதி இயக்கத்தில் நடிக்கும் சல்மான்கான்

1 mins read
5156a78f-aa5d-4b1a-979c-824a75f6fe73
சல்மான் கானுடன் ரேவதி. - படம்: ஊடகம்

மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் நடிகை ரேவதி.

தற்போது மும்பையில் முகாமிட்டுள்ள அவர், நல்ல கதைகளாகத் தேர்வு செய்து இந்திப் படங்களில் நடித்து வருகிறாராம்.

கடைசியாக, ‘சலாம் வெங்கி’ என்ற இந்திப் படத்தை இயக்கிய அவர், மீண்டும் ஒரு இந்திப் படத்தை இயக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்.

இந்தப் புதிய படத்தின் நாயகன், நாயகி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், ரேவதியின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான நடிகர் சல்மான்கான் இப்படத்தில் கௌரவ வேடத்தில் நடிப்பது மட்டும் உறுதியாகிவிட்டதாகத் தகவல்.

குறிப்புச் சொற்கள்