தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சல்மான் கானின் ‘சிக்கந்தர்’, விஜய் படத்தின் ரீமேக்கா; முருகதாஸ் விளக்கம்

1 mins read
cf073662-abf2-4f63-bf90-bc0a6b25ef19
பாலிவுட் பிரபலம் சல்மான்கான். - படம்: இந்துஸ்தான் டைம்ஸ் / இணையம்

சென்னை: ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கதாநாயகனாக பாலிவுட் நடிகர் சல்மான்கான் நடித்துள்ள படம் ‘சிக்கந்தர்’.

ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தைப் பிரபல தயாரிப்பாளர் சஜித் நதியத்வாலா தயாரிக்கிறார்.

அண்மையில் இப்படத்தின் டீசர் வெளியாகி வைரலானது. ‘சிக்கந்தர்’ வரும் ரம்ஜான் பண்டிகைக்கு வெளியாக உள்ளது.

அண்மைக் காலமாக, ‘சிக்கந்தர்’, விஜய்யின் ‘சர்கார்’ படத்தின் ரீமேக் என்ற வதந்தி இணையத்தில் பரவி வருகிறது. மேலும், படத்தின் டீசரும் பிரபாஸ் நடித்த ‘சலார்’ படத்தை நினைவூட்டுவதாக சமூக ஊடகங்களில் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், ‘சிக்கந்தர்’ எந்தப் படத்தின் ரீமேக்கும் இல்லை என்று உறுதியாகக் கூறியிருக்கிறார் இயக்குநர் முருகதாஸ். ‘‘சிக்கந்தர் முற்றிலும் புதிய கதை. இது எந்தவொரு படத்தின் ரீமேக்கோ தழுவலோ இல்லை.” என்றார் முருகதாஸ்.

தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான முருகதாஸ் ‘தீனா’, ‘ரமணா’, ‘துப்பாக்கி’, ‘கத்தி’ எனப் பல வெற்றிப் படங்களை இயக்கி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். இவர் தற்போது தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘மதராசி’ எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

குறிப்புச் சொற்கள்