நடிகை சமந்தா இரண்டாவது திருமணம் செய்துகொள்வது குறித்து சூசகமாக ஒரு தகவலை வெளியிட்டுள்ளதாகத் தமிழக ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அவரது திருமணம் அடுத்த ஆண்டு நடைபெற வாய்ப்பு உள்ளதாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நடிகை சமந்தா தமது சமூக ஊடகப் பக்கத்தில் ஜோதிடக் குறிப்புகள் போல் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
“ரிஷபம், கன்னி, மகர ராசிக்காரர்கள் அடுத்த ஆண்டு தொழில் ரீதியில் முன்னேறுவார்கள். நிறைய பணம் சம்பாதிப்பார்கள். மேலும், நம்பிக்கையுடன் காதலிக்கும் துணைவரைப் பெறுவார்கள். குழந்தைகளைப் பெற்றுக்கொண்டு வாழ்க்கை லட்சியங்களை அடைவார்கள்.
“உடல் ரீதியாகவும் பலமாக இருப்பார்கள். இதில் இருப்பவை எல்லாம் நடக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்,” என்று அவர் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
சமந்தா ரிஷப ராசிக்காரர்.

