படப்பிடிப்பில் காயப்பட்ட சமந்தா

படப்பிடிப்பில் காயப்பட்ட சமந்தா

1 mins read
b7e15b0c-b43d-40c4-b5da-1979ceb2723a
சமந்தா. - படம்: ஊடகம்

படப்பிடிப்பின்போது நடிகை சமந்தாவுக்கு காயம் ஏற்பட்டதாக வெளியான தகவல் அவரது ரசிகர்களுக்கு கவலை அளித்துள்ளது.

தற்போது இந்தி நடிகர் வருண் தவானுடன் இணையத்தொடர் ஒன்றில் நடித்து வருகிறார் சமந்தா.

இதற்கான படப்பிடிப்பின்போது சண்டைக்காட்சியின்போது கால் முட்டியில் பலத்த அடி ஏற்பட்டதாம். இதனால் வேதனையில் துடித்துள்ளார் சமந்தா.

மேலும், காயம் ஏற்பட்ட பகுதியைப் புகைப்படம் எடுத்து ரசிகர்களுடன் பகிர்ந்துகொண்டுள்ள அவர், ‘காயங்கள் இல்லாமல் அதிரடி நட்சத்திரமாக உருவெடுக்க இயலாதா’ என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்