கிரிக்கெட் அணியின் உரிமையாளராகும் சமந்தா, கீர்த்தி சுரேஷ்

கிரிக்கெட் அணியின் உரிமையாளராகும் சமந்தா, கீர்த்தி சுரேஷ்

2 mins read
5d477573-3c81-4fdc-a43b-2054ff41db89
நடிகை சமந்தா. - படம்: ஊடகம்

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளாக விளங்கும் சமந்தா, கீர்த்தி சுரேஷ் ஆகிய இருவரும் விளையாட்டு அணிகளின் உரிமையாளர்களாகி உள்ளனர். அவர்களுக்கு விளையாட்டுப் பிரியர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்தியாவின் கேரள மாநிலத்தில் விரைவில் கேரளா லீக் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டிக்கான விளம்பரத் தூதராக மோகன்லால் உள்ளார். மொத்தம் ஆறு அணிகள் பங்கேற்கும் கேரளா லீக் கிரிக்கெட் விளையாட்டில் 33 போட்டிகள் நடைபெற உள்ளதாகக் கூறப்பட்டது.

இந்த ஆறு அணிகளில் ஒன்றான திருவனந்தபுரம் அணியின் உரிமையாளராக நடிகை கீர்த்தி சுரேஷ் இணைந்துள்ளார். அதேபோல் வேர்ல்ட் பிக்கில்பால் லீக் என்ற தொடரின் சென்னை அணிக்கு சமந்தா உரிமையாளர் ஆகியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியபோது, “சிறுவயது முதலே எனக்கு பிக்கில்பால் (Pickleball) விளையாட்டு மிகவும் பிடிக்கும், இந்தத் தொடரின் சென்னை அணியின் உரிமையாளராகி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

விளையாட்டுத் துறையில் பெண்கள் அண்மைகாலமாக அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். எப்போதும் நான் இந்தியாவின் வளர்ந்து வரும் விளையாட்டு அணியின் ஒரு அங்கமாக இருக்க விரும்புகிறேன். நிறைய இளம் பெண்களை பிக்கில்பால் விளையாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பதுதான் எனது நோக்கம்,” என்று அவர் கூறியுள்ளார்.

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் வேர்ல்ட் பிக்கில்பால் லீக் தொடர் நடைபெற உள்ளது என்பதும் இதில் சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத், புனே, அகமதாபாத் ஆகிய அணிகள் விளையாட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்