தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காதலா காதலா... மீண்டும் விழுந்தாரா சமந்தா

1 mins read
7a2f2311-b616-49db-9875-fb0b08cc5462
உலக பிக்கல்பால் லீக் போட்டிகளின்போது இயக்குநர் ராஜ் நிடிமோருவுடன் காணப்பட்டார் சமந்தா. - படங்கள்: filmibeat.com / இணையம்

ஹைதராபாத்: தமிழ், தெலுங்குத் திரையுலகுகளில் கொடிகட்டிப் பறந்துவரும் நடிகை சமந்தா நடிகர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்து சில ஆண்டுகள் ஆகிவிட்டன.

அவர் மயோசிட்டிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் அதற்காக சிகிச்சை எடுத்து வருவதால் திரையுலகிலிருந்து சில காலம் விலகி இருந்தார். இப்போது சமந்தா மீண்டும் திரைப்படங்களில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது ‘உலக பிக்கல்பால் லீக்’கில் (World Pickleball League) போட்டியிடும் சென்னை சூப்பர் சேம்ப்ஸ் (Chennai Super Champs) என்ற அணியை வாங்கியுள்ளார் சமந்தா. அந்தப் போட்டிகள் நடந்துவரும் நிலையில் சமந்தாவும் ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார்.

அந்தப் புகைப்படங்கள் அண்மையில் வெளியாயின. பிரபல திரைப்பட, தொடர் இயக்குநர் ராஜ் நிடிமோருவிடன் இருந்தது அப்படங்களில் தெரிந்தது.

அதனைத் தொடர்ந்து ‘சிட்டாடல்’ (Citadel) போன்ற தொடர்களை இயக்குநரான ராஜ் நிடிமோருவும் சமந்தாவும் காதல் வலையில் சிக்கியுள்ளனரா என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

2010ஆம் ஆண்டு வெளிவந்த ‘பானா காத்தாடி’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமான சமந்தா, விஜய், சூரியா, வி‌ஷால் உள்ளிட்ட முன்னணி நாயகர்களுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசமந்தாகாதல்