தனக்குப் பதிலாக இரண்டு நடிகைகளை இணையத்தொடரில் நடிக்க நடிகை சமந்தா சிபாரிசு செய்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது.
கியாரா அத்வானி, கிருத்தி சனோன் ஆகியோரே அந்த இரு நடிகைகளாம்.
அண்மைக்காலமாக படங்களில் நடிப்பதைக் குறைத்துக் கொண்டுள்ளார் சமந்தா. இந்நிலையில் இணையத்தொடர் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பு அவரைத் தேடி வந்துள்ளது.
ஆனால் சமந்தாவோ கியாரா அத்வானி, கிருத்தி சனோன் ஆகியோரின் புகைப்படங்களை சம்பந்தப்பட்ட இயக்குநர்களிடம் காண்பித்து தம்மைவிட அவ்விருவரும் தனக்கான கதாபாத்திரத்துக்கு சிறப்பாகப் பொருந்துவர் என்று கூறினாராம்.
ஆனால் அந்த இயக்குநர்கள் திட்டவட்டமாக சமந்தாதான் நடிக்க வேண்டுமெனக் கூறிவிட்டனர். அந்த இயக்குநர்கள் ராஜ், டி.கே. என்றும் தாம் குறிப்பிட்ட அந்த இணையத்தொடர் ’சிட்டாடல்: ஹனிஃனி’ என்றும் அண்மைய பேட்டியில் சமந்தா தெரிவித்துள்ளார்.