கடைசியாக ஓடிடி தளத்தில் வெளியான ‘சிடாடெல் ஹனி பன்னி’ இணையத் தொடரில் வருண் தவானுடன் நடித்தார் சமந்தா.
உடல்நலப் பிரச்சினை காரணமாக திரையுலகில் இருந்து சிலகாலம் விலகி நின்ற நடிகை சமந்தா, இப்போது மீண்டும் பழைய உற்சாகத்துடன் படங்களில் நடிக்கத் தொடங்குவதாக அறிவித்துள்ளார்.
கடைசியாக அமேசானில் வெளியான ‘சிடாடெல் ஹனி பன்னி’ இணையத் தொடரில் வருண் தவானுடன் நடித்த இவர், அடுத்து இந்தி இரட்டை இயக்குநர்களான ராஜ், டிகே ஆகிய இருவரும் இயக்கும் இணையத் தொடரில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
இந்நிலையில், ஊடகப் பேட்டி ஒன்றில், “நான் இப்போது நடித்து வரும் இணையத் தொடருக்கான பணிகள் முடிவடைந்ததும், புதுப் படம் ஒன்றில் நடிக்க உள்ளேன். இன்னும் ஒன்றிரண்டு மாதங்களில் அதற்கான படப்பிடிப்பு தொடங்கிவிடும்.
“அடுத்த சில மாதங்களில் எனக்கு நிறைய வேலை இருக்கிறது. நான் திரைப்பட உருவாக்கத்தில் இருந்து விலகி இருப்பதெல்லாம் முடிந்துவிட்டது. சினிமா என் முதல் காதல்,” என்று அப்பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் சமந்தா.
ஏற்கெனவே அறிவித்த ‘பங்காரம்’ படத்தின் மூலம் சமந்தா தயாரிப்பாளராகவும் உருவாகியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.