இந்தி இணையத்தொடர் ஒன்றில் நடித்து வருகிறார் சமந்தா. இந்நேரத்தில் ஒரு புத்தகத்தின் அட்டைப்படத்திற்காக வித்தியாசமான தோற்றத்தில் அவர் படம் எடுத்து இருக்கிறார்.
கறுப்பு நிறத்தில் உடையணிந்து தன்னுடைய சிகை அலங்காரத்தை ஆண்களைப் போன்று மாற்றியுள்ள அவர், ஹாலிவுட் நடிகை.
ஹாலிவுட் நடிகை போல ஆளே மாறிப் போயிருக்கிறார். ஹாலிவுட் படங்கள், இணையத்தொடர்களில் நடிக்கும் முயற்சியாக இந்தப் படப்பிடிப்பை அவர் நடத்தி இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஏற்கெனவே பாலிவுட் சினிமாவில் இருந்து பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன் உள்ளிட்ட பல நடிகைகள் ஹாலிவுட் படங்கள், இணையத்தொடர்களில் கால்பதித்துள்ள நிலையில் விரைவில் சமந்தாவும் அந்தப் பட்டியலில் இணைய வாய்ப்புள்ளது என்கிறது திரையுலகம்.