அண்மையில் விருந்து நிகழ்ச்சியில் தன்னுடன் நடித்த வருண் தவானுடன் நெருக்கமாக சமந்தா நடனமாடிய படங்களும் காணொளிகளும் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன.
சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யாவுக்கும் நடிகை சோபிதா துலிபாலாவுக்கும் டிசம்பர் 4ஆம் தேதி திருமணம் நடக்கவிருக்கிறது.
ஹைதராபாத்தில் அவர்களின் திருமணம் கோலாகலமாக நடக்கவிருக்கும் சூழலில் சமந்தா ‘சிட்டாடல்’ இணையத்தொடரில் நடித்த நாயகன் வருண் தவானுடன் ஒரு விருந்தில் பங்கேற்றார். அதன் பின் அவர் ‘பேபி ஜான்’ பட பாடலுக்கு வருண் தவானுடன் நெருக்கமாக நடனம் ஆடினார்.
அந்தப் படங்கள் சமந்தாவும் வருண் தவானும் படங்களை வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர். அவை வெளியான இரண்டு மணிநேரத்திலேயே ஒரு மில்லியன் விருப்பங்களை இந்தப் புகைப்படங்கள் பெற்றுள்ளன. அந்த அளவிற்கு இந்த ஜோடி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.