இசையமைப்பாளராக அறிமுகமாகும் ஹாரிஸ் ஜெயராஜ் மகன்

1 mins read
2a2be638-8383-45ef-8a6b-a3ee9a977f61
‘ஐயையோ’ பாடலில் சாமுவேல் நிக்கோலஸ். - படம்: ஊடகம்

இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் மகன் சாமுவேல் நிக்கோலஸ் இசையமைப்பாளராக அறிமுகமாகி உள்ளார்.

‘ஐயையோ’ எனத் தொடங்கும் தனிப்பாடலைக் காணொளியுடன் வெளியிட்டுள்ளார் நிக்கோலஸ்.

தானே இசையமைத்துப் பாடி, நாயகனாகவும் நடித்துள்ள நிலையில், ‘ஐயையோ’ பாடலுக்கு தொடக்கத்திலேயே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

இதுதொடர்பாக அண்மையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் சாமுவேல் நிக்கோலஸ்.

அப்போது, தன் தந்தையின் இசையில் ‘ஏழாம் அறிவு’ படத்தில் குழுப் பாடகராக தமது இசைப்பயணம் தொடங்கியதாகக் குறிப்பிட்டார்.

“எனது தந்தையின் இசை நிகழ்ச்சிகளில் கிடார் கலைஞராகவும் பாடகராகவும் பங்காற்றி உள்ளேன். ‘தேவ்’ திரைப்படத்தில் பாடலையும் பாடியுள்ளேன்.

“தற்போது ‘ஐயையோ’ பாடலின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாவது மிக்க மகிழ்ச்சி,” என்றார் சாமுவேல் நிகோலஸ்.

தனது நான்கு வயது முதல் டிரினிட்டி இசைப் பள்ளியின் பாடத்திட்டத்தின்படி இசை கற்று வருகிறார். இவரது அறிமுகப் பாடலை சனா மரியம் இயக்கியுள்ளார்.

இதையடுத்து, ‘மின்னலே’ உள்ளிட்ட பல்வேறு படங்களுக்கு அருமையான பாடலை வழங்கிய ஹாரிஸ் ஜெயராஜுக்கு பலர் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.

‘பால் டப்பா’ அனீஷ், சாய் அபயங்கர் ஆகியோர் வரிசையில், சாமுவேல் நிக்கோலஸ் இடம்பெறுவார் என இளம் ரசிகர்கள் பலர் சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்