நகைச்சுவையாக மட்டுமின்றி அவ்வப்போது சில படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்து வருகிறார் யோகி பாபு. அதோடு அண்மைக்காலமாக யோகி பாபு திருப்பதி, திருத்தணி, திருச்செந்தூர் உள்ளிட்ட பல ஆலயங்களுக்கு தான் மட்டுமின்றி தனது குடும்பத்துடன் சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார். அதோடு தனது கழுத்திலும், கையிலும் கடவுள் நம்பிக்கை அடிப்படையில் சில கயிறுகளையும் அவர் கட்டியுள்ளார்.
இந்நிலையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட யோகி பாபுவிடம், உங்கள் கையில் பல கயிறுகளை கட்டி இருக்கிறீர்கள். என்ன காரணம்? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு யோகி பாபு, ‘’இதெல்லாம் சாமி விஷயம். நம்முடைய முன்னோர்கள் உருவாக்கிய விஷயம். அதனால் இதைப் பற்றி இதற்கு மேல் பேச வேண்டாம். அதோடு இந்த இடத்தில் இது தேவையில்லாத கேள்வி,’’ என்றும் பதில் அளித்துள்ளார் யோகி பாபு.