‘வாத்தி’ பட நாயகி சம்யுக்தா, அடுத்து ‘சுயம்பு’ என்ற படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். இதில் போர் வீராங்கனையாக திரையில் தோன்றுகிறாராம்.
சம்யுக்தாவின் பிறந்தநாளையொட்டி இப்படத்தில் அவரது தோற்றத்தை படக்குழு வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது.
படத்தில் மற்றொரு நாயகியாக நபா நடேஷ் என்பவர் நடிக்கிறார்.
போர் பின்னணியில் உருவாகும் இப்படத்தை பல கோடி ரூபாய் செலவில் உருவாக்குகிறார்கள்.

