‘டூப்’ இல்லாமல் சண்டைபோட்ட சம்யுக்தா

‘டூப்’ இல்லாமல் சண்டைபோட்ட சம்யுக்தா

1 mins read
90018ac9-e3df-455b-afa9-3177ee7ed059
‘தி பிளாக் கோல்ட்’ படத்தில் சம்யுக்தா. - படம்: சினிமா எக்ஸ்பிரஸ்

‘வாத்தி’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தவர் சம்யுக்தா. தற்போது ‘டெம்பிள் ரோடு’, லாரன்சுடன் ‘பென்ஸ்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த ஆண்டே படப்பிடிப்பு தொடங்கி விரைவில் முடிவடைய உள்ள ‘தி ப்ளாக் கோல்ட்’ என்ற தெலுங்குப் படத்தில் அதிரடியான படத்தில் நடித்துள்ளாராம் சம்யுக்தா.

“இந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது பல காயங்கள் ஏற்பட்டன. ஆனாலும் இதைச் சவாலாக ஏற்றுக்கொண்டு தொடர்ந்து நடித்தேன். உடல் முழுவதும் ஆங்காங்கே சிறிய, பெரிய காயங்கள் ஏற்பட்டபோதும், கடைசி வரை எந்த சண்டைக் காட்சிக்காகவும் ‘டூப்’ பயன்படுத்தவில்லை.

“இத்தனைக்கும் இயக்குநர் யோகேஷ் பல காட்சிகள் மிகவும் ஆபத்தானவை என்று எச்சரித்தார். ஆனாலும், நானே நடிப்பதாகக் கூறிவிட்டேன்,” என்கிறார் சம்யுக்தா.

இந்தப்படம் வெற்றி பெறும் பட்சத்தில், தொடர்ந்து இதேபோன்ற கதையம்சம் உள்ள படங்களில் நடிப்பதாக முடிவு எடுத்துள்ளாராம்.

“தமிழில் எனக்கான வாய்ப்புகள் தொடர்ந்து தேடி வருகின்றன. எனினும், நான் எதிர்பார்த்த கதாபாத்திரங்கள் இன்னும் அமையவில்லை. நல்ல கதைகள், கதாபாத்திரங்கள் கிடைக்கும் பட்சத்தில் நிச்சயமாக நடிப்பேன்,” என்று கூறியுள்ளார் சம்யுக்தா.

‘தி பிளாக் கோல்ட்’ படத்தில் கையில் துப்பாக்கியுடன் இவர் ஆவேசமாகக் காட்சியளிக்கும் முதல்தோற்றச் சுவரொட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.

அடுத்த கட்டமாக இப்படத்தின் முன்னோட்டக் காட்சித் தொகுப்பை வெளியிட உள்ளனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்