முதன்முறையாக ராகவா லாரன்சுடன் இணைந்து நடிக்கிறார் நடிகை சம்யுக்தா மேனன்.
தெலுங்கில் ‘டெவில்’, ‘பீம்லா நாயக்’ உள்ளிட்ட படங்களில் நடித்துப் பிரபலமான இவர், தமிழில் ‘வாத்தி’ படத்தில் தனுஷுக்கு இணையாக நடித்து, தமிழ் ரசிகர்கள் இடையே நன்கு அறிமுகமானார்.
அதன் பிறகு, தமிழில் கவனம் செலுத்தாமல் தெலுங்குப் படத்தில் நடித்து வந்தார்.
இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில், பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில், ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘பென்ஸ்’ படத்தில் சம்யுக்தா மேனன் நாயகியாக நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக, பிரியங்கா மோகன்தான் நாயகியாக நடிக்க இருந்தார். எனினும், கால்ஷீட் பிரச்சினையால் அவருக்குப் பதிலாக சம்யுக்தா ஒப்பந்தமாக இருப்பதாகவும் தெரிகிறது.

