நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்ஜய் ஒரு திரைப்படத்தை இயக்குவதாக சில மாதங்களுக்கு முன்பு அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது.
லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படம் குறித்து கூடுதல் அறிவிப்புகளை தற்போது வெளியிட்டுள்ளனர்.
இப்படத்தில் நடிகர் கவின் நாயகனாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது சந்தீப் கிஷன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. தமன் இசையமைக்கிறார்.
விஜய் நடித்த ‘வேட்டைக்காரன்’ படத்தின் அறிமுகப்பாடலில் அப்போது சிறுவனாக இருந்த ஜேசன் சஞ்ஜய், ஓரிரு நிமிடங்கள் மட்டும் தன் தந்தையுடன் நடனமாடி இருப்பார்.
இவரும் நடிகராவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இயக்குநராக அறிமுகமாகி அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளார்.

