சிம்பு மீது தமக்குள்ள வருத்தம் இன்னும் போகவில்லை என்கிறார் ‘காதல்’ சந்தியா.
பல ஆண்டுகளுக்கு முன்பு ‘காதல்’ படத்தில் அறிமுகமான இவர், அப்படத்தின் பெரும் வெற்றிக்குப் பிறகு ‘காதல்’ சந்தியா என்றே அழைக்கப்பட்டார்.
பின்னர் ‘மகேஷ் சரண்யா மற்றும் பலர்’, ‘கண்ணாமூச்சி ஏனடா’, ‘டிஷ்யூம்’ என்ற படங்களில் நடித்த அவர், பின்னர் வாய்ப்புகள் குறைந்ததால் கோடம்பாக்கம் பக்கம் எட்டிப் பார்க்கவில்லை.
முன்னதாக, ‘வல்லவன்’ படத்தில் நடிக்கக் கேட்டு இவரை அணுகினாராம் சிம்பு. சந்தியாவும் அப்படத்தில் நடித்தார் என்றாலும் தம்மிடம் அளித்த வாக்குறுதியின்படி தமது கதாபாத்திரத்துக்கு சிம்பு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்று அண்மைய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் சந்தியா.
“என் கதாபாத்திரத்தை இப்படித்தான் உருவாக்குவார் என்று என் மனத்தில் கற்பனை செய்திருந்தேன். ஆனால், நான் நினைத்தபடி எதுவும் நடக்கவில்லை. இதனால் சிம்பு மீது எனக்கு இன்னும் வருத்தம் உள்ளது,” என்று அப்பேட்டியில் வெளிப்படையாகக் கூறியுள்ளார் சந்தியா.

