கவினுடன் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் நடன இயக்குநர் சாண்டி.
‘திங்க் ஸ்டூடியோஸ்’ நிறுவனத்தின் தயாரிப்பில் கென் ராய்சன் புதிய படமொன்றை இயக்கி வருகிறார்.
அதில் கவின், பிரியங்கா மோகன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். தற்போது கவினுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி இருக்கிறார் சாண்டி.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கவின்-சாண்டி நட்பு பெரிதாகப் பேசப்பட்டது. அதனைத் தொடர்ந்து கவின் படங்களுக்கு சாண்டி நடனம் அமைத்திருந்தபோதிலும், இருவரும் இணைந்து நடித்ததில்லை.
இவர்கள் இணைந்து நடிக்கும் முதல் படமாக கென் ராய்சன் இயக்கும் படம் அமைந்துள்ளது. இதனைப் புதிய சுவரொட்டி ஒன்றின் மூலம் படக்குழு அறிவித்துள்ளது.
காதல், நகைச்சுவை என அனைத்தும் கலந்து உருவாகும் இப்படத்துக்கு ஓஃப்ரோ இசையமைத்து வருகிறார். இப்படத்தில் வேறு யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பது குறித்த தகவல் விரைவில் வெளியிடப்படும் எனப் படக்குழு தெரிவித்துள்ளது.

