நடனப் பயிற்சியாளர் சாண்டி மாஸ்டர், மலையாளத்தில் நடிகராக அறிமுகமாகிறார்.
ஏற்கெனவே தமிழில் ‘லியோ’ படத்தில் வில்லனாகவும் நடித்துள்ளார் சாண்டி. பின்னர், ‘ஹாட்ஸ்பாட்’, ‘நிறம் மாறும் உலகில்’ ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில், மலையாளத்திலும் இவருக்குப் பட வாய்ப்புகள் தேடி வருகின்றன.
மலையாள நடிகர் திலீப் நடிக்கும் ‘ப ப ப’, கல்யாணி பிரியதர்ஷன் நாயகியாக நடிக்கும் ‘லோகா சாப்டர் ஒன்: சந்திரா’ ஆகிய மலையாளப் படங்களில் நடித்துள்ளார் சாண்டி.
இதில், கல்யாணி நடிக்கும் படத்தில் வில்லத்தனம் கலந்த காவல் அதிகாரியாக நடித்து சாண்டி அசத்தியுள்ளாராம். படத்தில் முன்னோட்டக் காட்சித் தொகுப்பைப் பார்த்த திரையுலகத்தினர் பலரும், அவரது நடிப்பை வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.
தமிழ் ரசிகர்களைப் போலவே, மலையாள ரசிகர்களையும் சாண்டி நிச்சயம் கவர்வார் என்று கல்யாணி பாராட்டுகிறார்.