இயக்குநராக விரும்பும் சஞ்சனா

1 mins read
30c3b3e4-d9e4-4d5a-8d16-6bb29c7f9bd4
‘லப்பர் பந்து’ நடிகை சஞ்சனா. - படம்: ஊடகம்

அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் கடந்த ஆண்டு தமிழ்த் திரையுலகிற்கு கிடைத்த தரமான திரைப்படங்களில் ஒன்று ‘லப்பர் பந்து’. இப்டத்தில் ஹரிஷ் கல்யாண் ஜோடியாக நடித்திருந்தவர் நடிகை சஞ்சனா.

2022ல் வெளியான இணையத் தொடரின் மூலம் நடிகையாக அறிமுகமானார் இவர். தமிழ் ரசிகர்கள் மத்தியில் ‘லப்பர் பந்து’ படம் மூலம் பிரபலமானவர்.

இளம் நடிகையாகத் திரையுலகில் வலம் வரும் இவர் கவினை நாயகனாக வைத்து படம் ஒன்றை இயக்கவுள்ளாராம்.

முன்னணி இயக்குநர் மணிரத்னம் இயக்கியுள்ள ‘தக் லைஃப்’ படத்தில் துணை இயக்குநராக பணிபுரிந்துள்ளார் சஞ்சனா.

இவர் இயக்கப்போகும் முதல் படம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்