சந்தானம் நடிப்பில் 125வது படமாக உருவானது ‘டி.டி.ரிடர்ன்’.
இதையடுத்து, ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படத்தில் நடித்து வந்தார் சந்தானம். இதில் கௌதம் மேனன், செல்வராகவன், யாஷிகா ஆனந்த், கீர்த்திகா, கஸ்தூரி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
எதிர்வரும் மே 1ஆம் தேதியன்று இந்தப் படம் வெளியாகும் எனத் தெரிகிறது.
இதே தேதியில்தான் கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘ரெட்ரோ’ படமும் வெளியாகிறது.
முதல்முறையாக சூர்யாவுடன் திரையில் மோதுகிறார் சந்தானம்.