நடிகர் விஜய்யின் 69வது படத்தில், சந்தானம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக வெளியான தகவல் கோடம்பாக்க வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தனி நாயகனாக நடிக்கத் தொடங்கிய பிறகு வெற்றி, தோல்வி குறித்து கவலைப்படாமல், நாயகனாக மட்டுமே நடிப்பது என்ற கொள்கையில் உறுதியாக இருக்கிறார் சந்தானம்.
இந்நிலையில், ‘தளபதி 69’ படத்தின் 40% படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இதில் பூஜா ஹெக்டே, பிரியாமணி, வரலட்சுமி, மமிதா பைஜு, பிரகாஷ் ராஜ், நரேன் எனப் பலர் நடித்து வருகின்றனர்.
இப்படத்தில் சந்தானம் இணைந்திருப்பதாக கடந்த இரு தினங்களாக கோடம்பாக்க வட்டாரங்களில் ஒரு தகவல் பரவியது.
தற்போது ‘இங்க நான்தான் கிங்’ என்ற படத்தை அடுத்து, ‘டிடி ரிட்டர்ன்ஸ்-2’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் சந்தானம்.
ஒரு சொகுசு கப்பலில் நடக்கும் நகைச்சுவையுடன் கூடிய திகிலூட்டும் சம்பவங்கள்தான் இப்படத்தின் கதை என்கிறார்கள்.
பொங்கல் பண்டிகையின்போது படத்தின் தலைப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.