தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வேகமாக தயாராகி வரும் சந்தானத்தின் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’

1 mins read
5c2a2bfd-b0ff-48c4-be48-ade4de4210df
‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ திரைப்படம் மே மாதம் வெளியாக உள்ளது. - படம்: சமூக ஊடகம்

நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடித்த ‘தில்லுக்கு துட்டு’, ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ ஆகிய படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.

அதைத்தொடர்ந்து, தற்போது மூன்றாம் பாகமாக ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ எனும் திரைப்படம் உருவாகி வருகிறது.

ஆர்யாவின் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தை பிரேம் ஆனந்த் இயக்கிவருகிறார். இதில் சந்தானத்துடன் இணைந்து கஸ்தூரி, செல்வராகவன், கெளதம் வாசுதேவ் மேனன் என பலர் நடித்துள்ளனர்.

இப்படம் மே மாதம் வெளியாக உள்ள நிலையில், படத்திற்கான குரல்பதிவு பணி வேகமாக நடந்துவருகிறது.

நடிகர் சந்தானமும் தமது குரல்பதிவு பணிகளை தொடங்கியுள்ளார். இது குறித்த படங்களும் காணொளிகளும் சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.

‘தில்லுக்கு துட்டு’, ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றதால் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ மீது எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்