தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

படப்பிடிப்பில் கொதிக்கும் எண்ணெய் கொட்டி சான்வி மேக்னா காயம்

1 mins read
da84e55e-58f5-4988-80fd-08a83fa8b25c
சான்வி மேக்னா. - படம்: ஊடகம்

‘குடும்பஸ்தன்’ படத்தில் மணிகண்டன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் சான்வி மேக்னா. இவர், ‘புஷ்பகவிமானம்’, ‘புட்டாகதலு’ உள்ளிட்ட பல படங்களிலும் நடித்துள்ளார். ‘குடும்பஸ்தன்’ படத்தில் குடும்பத் தலைவியாக நடித்திருந்தாலும், சமூக வலைத்தளங்களில் கவர்ச்சிப் படங்களை வெளியிட்டுப் பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். இசை அமைப்பாளர் சாய் அபயங்கரின் ஆல்பம் ஒன்றிலும் தோன்றினார். இந்நிலையில், படப்பிடிப்பில் பங்கேற்றபோது, அருகில் இருந்த சூடான எண்ணெய் கொட்டி கை முழுவதும் படுகாயம் ஏற்பட்டுள்ளதாக அவர் பதிவிட்டுள்ளார்.

‘விபத்துகள் எதிர்பாராதவிதமாக நடக்கத்தான் செய்யும். மீண்டு வருவது நம் கையில் தான் இருக்கிறது’ என்று சான்வி மேக்னா குறிப்பிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்