சசிகுமாருக்கு சிறந்த நடிகர் விருது

1 mins read
3e0ea6c9-8924-44a8-8ee0-73552d0590f9
சென்னையில் நடந்த அனைத்துலக திரைப்பட விழாவில் நடிகர் சசிகுமாருக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது. - படம்: இந்து தமிழ் திசை

சென்னையில் நடந்த அனைத்துலக திரைப்பட விழாவில் நடிகர் சசிகுமாருக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது.

சென்னையில் நடைபெற்ற 23வது அனைத்துலகத் திரைப்பட விழாவை ‘இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன்’, தமிழக அரசு இணைந்து நடத்தியது. இவ்விழா, டிசம்பர் 11ஆம் தேதி தொடங்கி 18ஆம் தேதி வரை நடைபெற்றது.

51 நாடுகளைச் சேர்ந்த 122 திரைப்படங்கள் திரையிடப்பட்டன.

தமிழில் ‘அலங்​கு’, ‘பிடிமண்’, ‘மாமன்’, ‘மருதம்’, ‘பறந்து போ’, ‘காதல் என்​பது பொது உடைமை’, ‘மெட்​ராஸ் மேட்​னி’, ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்​ராஸ்’, ‘வேம்​பு’, ‘டூரிஸ்ட் பேமிலி’, ‘பாட்​ஷா’, ‘3பிஹெச்கே’ ஆகிய 12 திரைப்​படங்​கள் திரை​யிடப்பட்​டன. நிறைவு விழாவில் விருதுகள் வழங்​கப்​பட்​டன.

‘டூரிஸ்ட் பேமிலி’ திரைப்படத்தில் நடிகர் சசிகுமாருக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது.

‘காதல் என்பது பொதுவுடைமை’ படத்திற்காக லிஜோமோல் ஜோஷுக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது.

இயக்குநர் ராம் இயக்கிய ‘பறந்து போ’ திரைப்படம் முதலிடத்தைப் பிடித்து, சிறந்த படத்திற்கான விருதினைப் பெற்றது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாதிரைப்படம்