தனுஷின் அடுத்த படத்துக்கு ‘கர’ எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது அவரது 54வது படம்.
வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க, விக்னேஷ் ராஜா இயக்குகிறார். இவர் இதற்கு முன்பு ‘போர் தொழில்’ படத்தை இயக்கியவர்.
‘கர’ படத்தில் மமிதா பைஜு நாயகியாக நடித்துள்ளார்.
மேலும், கே.எஸ்.ரவிகுமார், கருணாஸ், பிரித்வி ராஜன், ஜெயராம் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கெனவே முடிந்துவிட்டது. தொழில்நுட்பப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
பொங்கல் பண்டிகையையொட்டி படத்தின் தலைப்புடன் கூடிய சுவரொட்டி வெளியிடப்பட்டது. இப்படத்தின் மின்னிலக்க உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.
தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாகும் இந்தப் படத்துக்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

