விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே.சூர்யா, கிருத்தி ஷெட்டி ஆகியோர் நடித்துவரும் ‘எல்ஐகே’ (‘லவ் இன்ஷ்யூரன்ஸ் கம்பெனி’) படம் அடுத்த ஆண்டு கோடைக் காலத்தையொட்டி மே மாதம் வெளியாகும் எனத் தெரியவந்துள்ளது.
தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அனிருத் இசையமைக்கிறார். முழுநீள காதல், நகைச்சுவைப் படமாக உருவாகிறதாம்.
அனிருத் இசையில் வெளியான ‘தீமா’ பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கோடை வெயிலில் இதம்தரும் காதல் படமாக ‘எல்ஐகே’ வெளியாக இருப்பதாக விக்னேஷ் சிவன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.