ரஜினிகாந்த் (படம்) திரையுலகில் அறிமுகமாகி 50 ஆண்டுகள் ஆகிவிட்டன.
இதையடுத்து, இந்த நிகழ்வை பெரிய அளவில் கொண்டாடுவது தொடர்பாக ஏற்கெனவே பலர் பேசி வந்தனர். எனினும் ரஜினிகாந்த் தரப்பில் ஏனோ இது தொடர்பாக ஆர்வம் காட்டவில்லை.
இடையில் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் அவர் ஓய்வெடுப்பதாகக் கூறப்பட்டது. எனவே பொன் விழாக் கொண்டாட்டம் தள்ளிப்போகலாம் என விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில், ஏதேனும் தொலைக்காட்சி நிறுவனத்தின் ஆதரவுடன் இந்த விழா நடத்தப்படுமா அல்லது தனிப்பட்ட விழாவாக நடக்குமா என்பது இன்னும் முடிவாகவில்லை.
ரஜினி எடுக்கும் முடிவே இறுதியானது என்றும் கூறப்படுகிறது.