தன் பெயரில் சிலர் விளம்பரம் செய்து, மோசடியாகப் பணம் வசூலிப்பதாக பின்னணிப் பாடகி சித்ரா தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளம் ஒன்றில் இவரது பெயரில் இந்த மோசடி விளம்பரம் இடம்பெற்றுள்ளதாம்.
அதில், தான் ஒரு தனியார் நிறுவனத்தின் விளம்பரத் தூதராகச் செயல்படுகிறேன் என்றும் ரூ.10,000 மூதலீடு செய்து அந்நிறுவனத்தின் பங்குகளை வாங்கினால், அவற்றின் மதிப்பு ரூ.50,000 ஆக உயரும் என்றும் சித்ரா பேசுவதுபோல் சித்திரிக்கப்பட்டுள்ளது. மேலும், முதலீடு செய்யும் தனது ரசிகர்களுக்கு ஐஃபோன் பரிசாக வழங்கப்படும் என்றும் சித்ரா கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நண்பர்கள் மூலம் இதையறிந்த சித்ரா, காவல்துறையில் புகார் அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், மோசடி விளம்பரத்தை நம்பி யாரும் ஏமாந்துவிடக் கூடாது என்றும் சித்ரா எச்சரித்துள்ளார்.