தமது பெயரைப் பயன்படுத்தி, சிலர் மோசடியில் ஈடுபட்டு வருவதாக கமல்ஹாசனின் இளைய மகள் அக்ஷரா ஹாசன் புகார் எழுப்பியுள்ளார்.
இப்ராகிம் அக்தர் என்ற ஆடவர், ஊட்டியில் ஓர் அலுவலகத்தை நடத்தி வருவதாகவும் தனது குடும்பத்தின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.
“எங்களுக்கும் அந்த ஆடவருக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. எனவே, இந்த விவகாரம் குறித்து சட்ட ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ள இருக்கிறோம்.
“ஆகையால் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அந்த ஆடவருடன் தொடர்புகொள்ள வேண்டாம்,” என்று அக்ஷரா ஹாசன் கூறியுள்ளார்.


