பத்து ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி வெற்றி பெற்ற ‘பிச்சைக்காரன்’ படத்தின் இரண்டாம் பாகமாக, ‘நூறுசாமி’ படம் உருவாகிறது என்று ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
சசி இயக்கத்தில் வெளியான அந்தப் படம் அம்மா, மகன் பாசத்தை அடிப்படையாகக் கொண்டு உருவானது. தற்போது ‘நூறுசாமி’ படத்திலும் அதேபோன்று உருவாக்க இருப்பதாகத் தெரிகிறது. இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை.
இந்நிலையில், அம்மா பாத்திரத்தில் நடிக்க, நடிகை சுஹாசினி ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
‘பிச்சைக்காரன்’ படத்தில் தீபா ராமானுஜம், நாயகன் விஜய் ஆண்டனியின் தாயாக நடித்திருந்தார்.
இரண்டாம் பாகத்தில் சுஹாசினி தவிர, ‘லப்பர் பந்து’ சுவாசிகா, லிஜோ மோல் ஜோஸ் ஆகியோர் நடிக்கின்றனர்.
விஜய் ஆண்டனியின் அக்கா மகன் அஜய்யும் சிறு கதாபாத்திரத்தில் தோன்றுகிறார்.
அம்மா, மகன் பாசத்தைப் போல் அண்ணன் தம்பி பாசத்தைச் சித்திரிக்கும் சில காட்சிகளும் படத்தில் இடம்பெறும் எனத் தகவல்.